நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமைப்பு கோரிக்கை!

நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமைப்பின் உறுப்பினர்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் குறித்த அமைப்பினரது ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரனிடமே (வி.கே.ஜெகன்) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்
மேலும் குறித்தபகுதி வறிய மக்களதும் இளைஞர் யுவதிகளினதும் எதிர்கால வாழ்வியலுக்கான உதவித்திட்டங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதார மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறும் மாதர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்தபகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்ட யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்
Related posts:
|
|