நிபந்தனைகளை மீறிய 80 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் மீள பெறப்பட்டன!

Sunday, July 10th, 2016

அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, குறைப்பாடுகளுடன் போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீளக் கைப்பற்றியுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இத்தகைய பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமசந்திர கூறினார்.

உரிய முறையில் ஆசனங்களை அமைக்காமை, பயணச்சீட்டு விநியோகிக்காமை, பயண முடிவிட பெயர்ப் பலகைகளை சரியான முறையில் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த பேருந்துகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இதற்கமைய பேருந்துகளில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு இந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறைபாடுகளை நிவர்த்தி செய்தபின்னர் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமசந்திர தெரிவித்தார்.

போக்குவரத்து அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:


கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டை இறக்குமதி - இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ...
இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் - கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் - இராஜாங்க ...