நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வடக்கின் விவசாய அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை கையளிக்கப்படவுள்ளது – வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்!

Tuesday, November 15th, 2016
வட மாகாண விவசாய அமைச்சருக்கு எதிரான ஆவணங்கள் எதிர்வரும் வாரம் பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் கையளிக்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்..
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –  வட மாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரிக்குமாறு நடப்பாண்டின் இரண்டாம் மாதம் ஒரு பிரேரணையாக கொண்டு வந்தேன்.

இருப்பினும் முதலமைச்சரின் விசாரணையின் பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த எமக்கு, அந்த விசாரணை இடம்பெறுவதே கேள்விக்குறியாக அமைந்துள்ளது.  முதலமைச்சரையும் உள்ளடங்கியதே அமைச்சர் வாரியம். எனவே முதலமைச்சரை விசாரணை செய்யும் குழுவினை முதலமைச்சரே தேர்வு செய்யும் சட்டம் ஆதிக்கம் கிடையாது.

இதன் காரணமாக குறித்த குழு இயங்குமா அல்லது இதற்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்வி எழும் நிலையில் இனியும் காத்திராது விவசாய அமைச்சர் தொடர்பில் என்னிடம் உள்ள குற்ற ஆவணங்களை எதிர்வரும் வாரம் பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவில் கையளிக்கவுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.

1107210279Untitled-1

Related posts: