நிதி அமைச்சர் பசில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே திடீர் தொலைபேசி உரையாடல்!

Thursday, November 11th, 2021

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த தொலைபேசி உரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது எதிர்காலத்தில் இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: