நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம்!

நாட்டின் நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு, வலுவான நிதி பாதுகாப்பு வலையமைப்பு தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடட் ஸெர்வோஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், வணிகங்கள், தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு நம்பகமான மற்றும் நிலையான வங்கித்துறை அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் இடம்பெறும் சிறுகுற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடி...
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் ஜூன் 7 வரை சீல் !
நாகப்பட்டினம் - திருகோணமலை இடையில் எண்ணெய் குழாய்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பே...
|
|