நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க!

Sunday, May 8th, 2016

நிதித்துறையின் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 6 மாத காலப்பகுதியினுள் குறித்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஜேர்மனில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 49 வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய அவர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இதனிடையே, குறித்த மாநாட்டின் போது இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts:


புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது - எ...
தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது த...
அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவது அவசியம் - ...