நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!!

Thursday, November 11th, 2021

அவசியமற்ற வகையில் பொதுமக்களை ஒன்றுக்கூட்டி நடத்தும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமய வழிப்பாட்டுத் தலங்களில் அதிகளவிலான பக்தர்களை ஒன்று கூட்டிய சம்பவங்கள் கடந்த சில நாட்களில் நடந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உபுல் ரோஹன உதாரணமாக காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் நிலைமையில், அடுத்த வாரத்தில் கடுமையாக கோவிட் பரவல் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: