நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம் – வனஜீவராசிகள் அமைச்சர்!

Monday, August 22nd, 2016

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதாக வனஜீவிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வருட இறுதிக்குள் இந்த தொகையை 23 மில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரெரா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தேசிய வனங்களை பார்வையிடுவதற்கு அதிகளவில் வருகை தருகின்றமையே இந்த வருமான அதிகரிப்புக்கு காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஊடாக நாட்டிற்கு பாரிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் துறையாக இந்த துறை மாற்றமடைவதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரெரா கூறியுள்ளார்.

Related posts: