நாளைமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்!

Sunday, May 2nd, 2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர ஆகிய அலுவலகங்கள் நாளை திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் மாவட்ட செயலகங்களில் வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சைகள் மற்றும் செயன்முறை பரீட்சைகள் என்பனவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட செயலகங்களில் வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: