நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு!
Sunday, February 28th, 2021யாழ்ப்பாண நகர பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பஸ்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச்செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது
மக்கள் நலன்கருதிய குறித்த நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்துர பேருந்து நிலையத்திற்கு சென்று தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய மாணவர் காப்புறுதி தினம் நாடெங்கும் அனுஷ்டிப்பு!
புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் - கொழும்பு பேராயர் வலியுறுத்து!
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
|
|