புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – கொழும்பு பேராயர் வலியுறுத்து!

Wednesday, September 9th, 2020

புதிய அரசமைப்பு மிகவும் அவசியமானாலும் நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் என கொழும்பு பேராயர் அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் வைத்து பேராயரை கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே போராயர் மேற்கண்டவாறு தன்னிடம் தெரிவித்தார் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்ளிடம் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பேராயர் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: