நாளைமுதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு – கல்வி அமைச்சு!

Monday, September 7th, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளும் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளைமுதல் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் 6ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: