நான் முதுகெலும்பு இல்லாதவனா? – ஜனாதிபதி!

Tuesday, July 23rd, 2019

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நேற்றைய உரைக்கு பதிலடிபோன்று இன்று மிக உணர்ச்சிவசமாக ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியுள்ளார்.

முதுகெலும்பில்லாதவன் நான் என்கிறார்கள். உண்மையை மறைத்து விட்டதாக கூறுகிறார்கள். மறைக்க எதுவுமில்லை. எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை. சட்டத்தின் முன் வந்து எதையும் அம்பலப்படுத்த எவருக்கும் சுதந்திரம் உண்டு.

தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதை 2015ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதன் பின்னர் பல தடவைகளிலும் வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தரமாக இங்கிருப்பதற்கு நான் வரவில்லை. விரும்பினால் தேர்தலுக்கு முகம் கொடுக்கவும் தயார் இல்லையென்றால் வீடு செல்வோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: