நாணயத்தில் திடீர் மாற்றம்!

Tuesday, March 14th, 2017

புழக்கத்திலுள்ள நாணயங்களில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.அதற்கமைய ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகள் புதிய வடிவில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

பித்தளை பூசப்பட்ட (தங்க நிறத்திலான) உலோகங்களினால் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகளை, துருப்பிடிக்காத உருக்குகளுக்கு மாற்றி (வெள்ளி நிறத்திற்கு) புதிய நாணயங்களாக வெளியிடவுள்ளது.

இதன்போது ஐந்து ரூபாய் குற்றியில் காணப்பட்ட எழுத்துக்கள், புதிய குற்றியில் நீக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணய குற்றியில் காணப்பட்ட வடிவங்கள் உட்பட ஏயை அனைத்து விடயங்களும் அதே போன்று உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த நாணய குற்றிகள் இலங்கையினுள் பயன்பாட்டிற்கு செல்லுபடியாகும் நாணய குற்றியாக காணப்படும். அது சுழற்றி செய்யப்படும் வரையில் இலங்கை மத்திய வங்கி அதற்கு பொறுப்பு என நிதி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: