நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓர் கோரிக்கை.!

Thursday, February 2nd, 2017

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளிலும் வாகனங்களிலும் காரியாலயங்களிலும் காட்சிப்படுத்துமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்தள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 69 ஆவது சுதந்திர தினம் இம்முறை காலி முகத்திடலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. தேசிய ஒற்றுமை என்ற தொனிப்பொருளின் இம்முறை சுதந்திரத் தினம் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து 69 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வாகனங்களிலும், வீடுகளிலும், காரியாலயங்களிலும் தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு நாட்டு மக்களிடம் தயவுடன் வேண்டுகின்றோம் என அமைச்சு கோரியுள்ளது.

1398451274Untitled-1

Related posts: