நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!
Wednesday, March 9th, 2022நாட்டில் தொடரும் மின்சார நெருக்கடியின் பி;ன்னணியில் சதிதிட்டமொன்று இருக்கலாம் என நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார்.
மக்களிற்கு தடையற்ற மின்சாரவிநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளார் இது குறித்துஅதிகாரிகளுடனும் ஆராயப்பட்டுள்ளது எனநாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஏன் மின்வெட்டு தொடர்கின்றது என்பது தெரியாது சதியா என கண்டறியவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டால் மின்வெட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டால் அதன் பின்னர் மின்வெட்டு தொடர்ந்தால் அதன் அர்த்தம் பிரச்சினை ஏதோ உள்ளது என்பதே,இது மறைமுக சதியாக கூடயிருக்கலாம் என அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!
போர் காலத்தை போன்று நடவடிக்கைகளை முன்னெடுங்கள்: பாதுகாப்பு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார் ஜனாதிபத...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்...
|
|