நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

மருத்துவப் பொருட்களுக்கான விலைக் குறைப்புக்கள் இந்த வாரத்தில் வர்த்தமானிப் படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சின் தகவல்படி 47 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப் படவுள்ளதாகவும் இந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விலைக்குறைப்புகள் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்!
நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் - சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!
|
|