நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு!
Monday, December 4th, 2023நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முருத்தெட்டுவ ஆனந்த தேரரின் அபயராம விகாரையில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை துண்டிக்க வந்ததாகவும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –
இன்றைய காலத்தில் நீர் மின் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. மின்சார சபைக்கு கோடி கோடியாக இலாபம் கிடைத்து வருகிறது.
ஆனால் நாட்டில் 50 இலட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன, அது நியாயமா?
சுமார் ஐந்து இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான தகவல்கள் உள்ளன.” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை; 10 கோடி அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!
நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு...
|
|