நாட்டில் தீவிரமடையும் டெல்டா – சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

அத்துடன் டெல்டா தொற்றினை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுவரை கிடைத்த மாறுபட்ட கொரோனா தொற்றின் மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இறுதியறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிரதமர் மஹிந்தவை வாழ்த்தியதன் மூலம் டக்ளஸின் அரசியல் நிலைப்பாடே சரியெனறு ஏற்றுக்கொண்டுள்ளார் சம்பந்த...
தூசு தட்டப்படும் அலுவலகம் - மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் கட்சி அலுவலகம் அல்ல - நீல நிறம் அகற்ற...
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...