நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்வுகூறல்!

Thursday, July 29th, 2021

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று (29) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய  மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

Related posts: