நாட்டின் சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர் ‘மஹிந்த ராஜபக்ச – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புகழாரம்!

Thursday, November 4th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு. உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச  நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் பயணித்த கட்சிகளை ஓரங்கட்டக்கூடாது. பங்காளிக்கட்சிகள் என்பவை கைப்பாவைகள் அல்ல. எனவே, கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய பிரதான பொறுப்பு தலைமைக்கட்சிக்கே இருக்கின்றது.  என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தயாசிறி, ” இந்நாட்டிலுள்ள சிறந்த தலைவர்தான் பிரதமர் மஹிந்த. அவர் வெளியிட்ட கருத்தால் மகிழ்ச்சியடைகின்றோம். அவருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டியது யாரின் பொறுப்பு என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார் என்றம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: