நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Saturday, October 30th, 2021நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடனான சந்திப்பின்’ போதே அவர் இதை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியேற்றப்பட்டுள்ளது. 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் சமூகத்தில் 60 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கிறது.
15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 32 சதவீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதேநேரம் இலங்கைக்கு நாளாந்தம் 4 இலட்சம் தடுப்பூசிகள் கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஆதன வரி செலுத்தாமையால் அபிவிருத்திப் பணிகள் முடக்கம்!
இடியுடன் கூடிய மழை, பலமான காற்று, கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
நெடுந்தீவில் 5 வயோதிபர்கள் படுகொலை - பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைது எ...
|
|