நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

இன்றைய சந்திப்பை தவிர்த்துள்ள அரசியல் கட்சிகள் எதிர்காலத்தி;ல் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்த்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பு அரசாங்கத்தி;ற்கும் எதிர்கட்சிக்கும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாநாட்டை புறக்கணித்த கட்சிகளின் யோசனைகைள செவிமடுக்க தயார் என ஜனாதிபதி தெரிவித்தார்.

000

Related posts: