நாடு இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Tuesday, May 26th, 2020ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் நாடு 100% வழமைக்கு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்காக, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புவதை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தில் தேவையான ஊழியர்களை அழைக்க வேண்டியதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவம் அவர் குறிப்பிட்டார்.
சேவைக்கு மொத்த ஊழியகர்ளில் மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டு, மூன்று பங்கு பணிக்கு அமர்த்துவதா என அந்தந்த நிறுவனத்தின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முறைமையின் ஊடாக ஏதாவது ஒரு வழியில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சன நெரிசல் அதிகளவில் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடற்படை குழு இன்னும் குறித்த பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் கடமைகளில் உள்ளனர். விமான நிலையமும் தற்போது ஓரளவு செயல்பாட்டில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் மேலும் 50 வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|