நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!

Monday, May 25th, 2020

நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாகவும் இதனடிப்படையில் நாளைமுதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே அமுலாக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளைமுதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 5 வீதிகள் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் கொழும்பு வரை பயணிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாவதுடன் மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் தொடருந்துகளில் பயணிப்பதற்காக 16 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பயணிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நாளைமுதல் தொடருந்து சேவைகளுக்காக 29 தொடரூந்துகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்து.

இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.

Related posts: