நாடாளுமன்ற தோர்தல் தொடர்பில் இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு தகவல்!

Wednesday, July 22nd, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4 மணியான காலப்பகுதி வரையிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்று முந்தினம் முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 178 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: