நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் – படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021

நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றில் சேவையாற்றும் சில பிரிவுகளின் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசாதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சபாநாயகரின் தலைமையில் நாளை முற்பகல் 11 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொவிட்-19 பரவல் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துதல் உள்ளிட்ட எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: