நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Thursday, November 17th, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் மோசமடைந்துள்ள விடயங்கள் காரணமாக இலங்கை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தெளிவான பாதையையும் திசை மாற்றத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே அரசியல் கதையை தொடராமல் அனைத்து தரப்பினரும் புதிதாக சிந்திக்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் அமுல்படுத்தப்பட்டதை விட எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளே இலங்கை பிரஜைகளின் தற்போதைய துன்பங்களுக்கு காரணம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொள்கை விடயங்களில் எவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், ஆனால் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, ஜனாதிபதி விக்ரமசிங்க பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.

ஏற்றுமதியை அதிகரிப்பது, சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செயற்படுவது போன்ற விடயங்களில் அனைவரும் உடன்படலாம் எனவும், அதேவேளை நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

எனவே மக்களின் இன்னல்களைப் போக்கும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: