பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – ஜனாதிபதி!

Friday, October 28th, 2016

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016 ரணவிரு விக்ரம என்ற படை வீரர் விருது வழங்கும் நிகழ்வில் உரையற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. பரமவீர விபூஷண, வீரோதார விபூஷண, வீரவிக்ரம விபூஷண, ரண விக்ரம, ரண சூர என்ற பெயர்களில் வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. இன்றைய விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவும், முப்படை தளபதிகளும் பங்கேற்றார்கள்.

படை வீரர்களின் நன்மதிப்பை பாதுகாக்க அரசாங்கம் ஒருபொதும் பின்னிற்க மாட்டாது என்று சுட்டி க்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகளுக்கு போதிய வசதிகளையும், துறைசார் அறிவையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பில் குறைபாடுகளுக்கும் இடமில்லையென்றும் கூறினார். சில ஊடகங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பாதுகாப்பு பற்றி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த பிரசாரங்கள் குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமாகும். ஒவ்வொரு படைவீரரும் தாய்நாட்டுக்காக ஆற்றிய சேவைகளை மறக்க முடியாது. வலது குறைந்த படை வீரர்களின் சம்பள கோரிக்கைக்கான தீர்வுகளை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

f333b0a91276935596a70d6f9c96e396_L

Related posts: