நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளைமுதல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் !

Sunday, January 1st, 2023

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள்  நாளை 2 ஆம் திகதி திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதிமுதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: