நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்!
Friday, February 25th, 2022ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமுடன் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷ்யா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது எனவும் மக்களைக் கொல்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|