நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் – பருவபெயர்ச்சி மழையே காரணம் என இந்த த ஹிந்து நாளிதழ் தகவல்!

Friday, October 20th, 2023

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் பருவபெயர்ச்சி மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்பதாக குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் போதிய முன்பதிவு இன்மையால், இந்த கப்பல் சேவையை வாராந்தம் 3 தினங்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பருவ பெயர்ச்சி மழை காரணமாக குறித்த கப்பல் சேவையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது

000

Related posts: