நஷ்டமடையாமல் இருக்க கடும் முயற்சி – தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் – இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள் தொடர்பில் தகவல்!

Monday, June 19th, 2023

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு  சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் போக்குவரத்துச் சபைக்கு  சொந்தமான 107 டிப்போக்களில் 40 டிப்போக்கள் தற்போது தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான டிப்போக்கள் கிராமப்புறங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு முன் நஷ்டமடையாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: