நவம்பர் 16 இல் வரலாற்றை மற்றியமைப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, November 9th, 2019

நவம்பர் 16 இல் கோட்டபயவே வெற்றிபெறுவார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குப்பலத்தை சரியான முறைறையில் பயன்படுத்த வேண்டு. அந்த வெற்றியூடாக நாம் நிலையான அபிவிருத்தியுடன் உங்கள் ஒவ்வொருவரதும் அபிலாசைகளுக்கும் தீர்வு காணப்படும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு கொடுக்குழாய் சக்திவேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் திவிக்கையில் –

தீர்வை பெற்றுத்தருவோம் எனக் கூறி உங்களை ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருக்கும் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வுள்ளனர். இதற்காக பேரம் பேசிக்கொண்டதுதான் என்ன?

மக்களது வாழ்வியலையும் அவர்களது அபிலாசைகளையும் விற்று தமக்காக தலா 300 மில்லியன் பணம் பெற்றுள்ளனர்.

தமிழ் தேசிய கூடமைப்பினருக்கு பேரம் பேசப்பட்ட நிதிபோல எம்மிடமும் பேரம்பேசப்பட்டன.

ஆனால் நாம் சஜித் பிரேமதாச அவர்களிடம் அதனை வாங்கவில்லை.

மாறாக நாம் கோட்டபய ராஜபக்ச அவர்களிடம் 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இதனை அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதனால் தான் நாம் கூறுகின்றோம் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற வேண்டும் என்று.

Posted by Douglas Devananda on Saturday, 9 November 2019

Related posts: