நல்லூரில் சந்தேகநபர்கள் மூவர் கைது!

Tuesday, August 13th, 2019

சந்தேகத்திற்கிடமான முறையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் ஆலய வளாகத்துக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதால் அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts: