நல்லூரில் இளைஞர் குழு அட்டகாசம்!

Tuesday, January 31st, 2017

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மக்  கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டும் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அயலவர்களிடம் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.  குறித்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts: