சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Saturday, January 14th, 2017

பிரார்த்தனைகள் ஊடாக நம்பிக்கையையும் சுபீட்சம் நிறைந்த வாழ்வியலையும் கட்டியெழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்காலத்தில் வென்றெடுப்பதற்கு கிடைக்கும் பெறுமதியான சந்தர்ப்பமாக இன்றைய தைத்திருநாள் அனைவருக்கும் அமைய வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் கொண்டாடும் தைத்திருநாள் மத,கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமானதும் மகிமை பொருந்தியதுமான ஒரு நாளாகும்.

விவசாயத்தினூடாக கிடைத்த பெறுபேறுகளுக்கு மக்கள் தமது இல்லங்களில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து வணங்கும் சூரியத் திருநாளாகவும் இது காணப்படுகிறது. இத்தினத்தில் சூரிய உதயததுடன் தமிழ் மக்களுக்குப் புத்தாண்டு பிறக்கிறது.

சூரிய பகவானினால் வாழ்வாதாரம் வழங்கப்படுவதனை நினைவுபடுத்தி, தமது முதலாவது விளைச்சலை சூரிய பகவானுக்குப் படைப்பதும், விளைச்சலை சிறப்பானதாக மாற்ற உறுதுணையாய் அமைந்த மழை, விலங்கினங்கள் உள்ளடங்கலாக இயற்கையின் அருட்கொடைகளுக்கு நன்றி தெரிவிப்பதும் இத்தினத்தில் இடம்பெறுகிறது.

அனைத்து எமது தேசத்து மக்களினதும் மத, கலாசார பல்வகைத்தன்மையை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி, கௌரவம் வழங்கி, ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்வதற்குத் தேவையான ஒரு சூழலை நிலைநிறுத்துவதாக இத்திருநாள் உருவாக்கிட வளிசமைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் எமது இனிய தைத்திருநாள் வாழ்தத்துக்களை தெரிவித்தக்கொள்வதில் மகிழ்வுறுகின்றேன் என தெரிவித்துள்ளார்…

12

Related posts: