நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது!

Thursday, December 2nd, 2021

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.

முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் நினைவு முத்திரை மற்றும் முதல்நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா என்ற மாணவன் மற்றும் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் என்ற மாணவி ஆகியோரின் சித்திரங்களை கொண்டு இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.

புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா என்ற மாணவனினால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது. கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: