எலிசபெத் மகாராணி மறைவையடுத்து புதிய அரசராக அரிழண ஏறினார் இளவரசர் 3 ஆம் சார்லஸ்!

Friday, September 9th, 2022

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றையதினம் காலமானார்.

96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், சமீபத்தில் புதிதாக தெரிவான பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸை சந்தித்து, அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக சுகவீனமுற்றிருந்த மகாராணி, பால்மோரல் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரச பதவியில் இருந்தவர்.

இதேநேரம் தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதேநேரம்

ராணி 2ஆம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3 ஆம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3ஆம் சார்லஸ் உயிரிழந்த 2ஆம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து டயானா 1997 இல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் தற்போதும் மர்மம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2 ஆவது திருமணம் செய்துகொண்டார்.

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார். பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்ல உள்ளது. அத்துடன் புதிய அரசராக இருந்து அவர் 14 பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராக வழிநடத்தவுள்ளார்.

000

Related posts: