நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை!

நிதிக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காக தற்போது நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி மோசடி தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது தற்போது நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக மாற்றி விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் சிலரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து பிரதமர நீதியரசர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தற்போது நடைமுறையிலுள்ள நீதிமன்றம் ஒன்றை விசேட நீதிமன்றமாக பெயரிட்டு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|