நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Sunday, February 6th, 2022

நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

நடைபாதையில் வாகனங்களை செலுத்துதல், சிறப்பு சேவை வாகனங்கள் மூலம் பொருட்களை ஏற்றுதல்/இறக்குதல் மற்றும்  நடைபாதைக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டத்தை மீறும் சாரதிகளை முதலில் எச்சரித்து அதிலிருந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அவர் அறிவித்துள்ளனர்.

மேலும் சட்டத்தை மீறும் வாகன சாரதிகள் மீது மோட்டார் போக்குவரத்து சட்டம், தேசிய நெடுஞ்சாலை சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் பொது சொத்து சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒருவர் மதுபோதையவில் வாகனம் செலுத்தியதாக கண்டறியப்பட்டால், சாரதி அனுமதி உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் 25 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: