நடிகர் சோ ராமசாமி காலமானார்!

Wednesday, December 7th, 2016

பிரபல நடிகரும், எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது புகழ் பெற்ற ஒருவராவார்.

மேலும், சோ ராமசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதேடு, அவரின் சிறந்த ஆலோசகாக இருந்து வந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், சோ ராமசாமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sr

unnamed (1)

Related posts: