தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய கடந்த 19 ஆம் திகதி அதன் நிலையான வைப்பு வசதி வகிதத்தை 4.50 சதவீதத்திலும் நிலையான கடன் வழங்கல் வசதி விகிதத்தினை 5.50 சதவீதத்திலும் தற்போதைய மட்டங்களிலில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது..
மேலும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறைக்கான முன்னுரிமை துறை கடன்வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வார இறுதியில் வாராந்த நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் விகிதம் 5.76 சதவீதத்திற்கு 12 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து.
முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒதுக்குப் பணம் அதிகரித்தமைக்கு சுற்றோட்டத்திலுள்ள நாணய அதிகரிப்பும் மத்திய வங்கியில் வர்த்தக வங்கிகளினால் பேணப்படும் வைப்புக்களின் அதிகரிதப்புமே காரணம் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|