தொழிலாளர் உரிமை மீறல்கள் நீடிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம் !

Wednesday, April 19th, 2017

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்கும் நோக்கில் இந்தக் குழு இலங்கை விஜயம் செய்துள்ளது.ஶ்ரீகுறிப்பாக சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுசேவைப் பணியாளர்கள் மத்தியில் தொழிலார் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.

பாலியல் துஸ்பிரயோகங்கள், திடீர் பணி நீக்கம், நெருக்கடி வழங்குதல் உள்ளிட்ட பல உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த விடயங்கள் தொடர்பில் தொழில் உறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: