தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்ததவுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் நாட்டில் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று அதிகாலை இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இராணுவத் தளபதி தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கோவிட் ஒழிப்பு படையணியை அமைச்சரவை நிர்வகிக்காமல், இராணுவம் நிர்வகிப்பதால்தான் தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தோல்வியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டையும் இராணுவத் தளபதி இதன்போது முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!
உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு - இலங்கை நுகர்வோர் விவகார அ...
விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் - வர்த்தகத்துறை அமைச்ச...
|
|