தொற்றா நோய்களையுடைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி – 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடமாடும் சேவை – உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Friday, November 26th, 2021

கொரோனா தொற்றுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையின் ஊடாக பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்துமாறு இன்று ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வைத்தியசாலைகளுக்கு க்லினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சையகத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

தொற்றா நோய் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அனைவருக்கும், விசேட வைத்திய பரிந்துரைக்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

உரிய சிகிச்சையகங்கள் அல்லது சனிக்கிழமை நாட்களிலும், இத்தரப்பினருக்கான மூன்றாவது தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

000

Related posts: