தொற்றாநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை –  அமைச்சர் ராஜித !

Friday, October 20th, 2017

2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் தொற்றாநோயை மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் ஜேர்மன் பேர்லினில் நடத்திய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புகையிலை மூலமாக நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தை கருத்திற்கொள்ளாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயிர்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கம். இதற்காக புகையிலைக்கான வரியை 90 சதவீதத்தினால் அதிகரிக்கமுடிந்தது என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.தொற்றாநோய்களின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் உயிரிழக்கின்றனர் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்

Related posts: