தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யக் கோரிக்கை!

Thursday, April 26th, 2018

கடந்த 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு கல்வி அமைச்சில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை அவசரமாக பதிவு செய்யுமாறு சங்கம் கேட்டுள்ளது.

பதிவு செய்யத் தவறும் பட்சத்தில் தங்களுக்கான நியமனத்தை இழக்க நேரிடும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் அடையாள அட்டை போட்டோ பிரதி, இறுதி நேர்முகத் தேர்வு கடித பிரதி, ஜி.சி.ஈ. சாதாரண மற்றும் உயர்தர சான்றிதழ் பிரதி, பாடசாலை அதிபரின் முதல் நியமன கடிதம் போன்ற ஆவணங்களுடன் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் மாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் புதிய உயர்கல்லூரி மண்டபத்தில் ஒன்று கூடுமாறு சங்கத் தலைவர் யோ.அருட்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related posts: