தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் அவசியம்!

தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது, கீழ் மாடியில் தபால் பெட்டிகளை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தொடர்மாடி வீடுகளில் காணப்படும் தபால் சேவை குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கிலேயே தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் இலக்கங்களின் அடிப்படையில் தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்றை கீழ் மாடியில் ஸ்தாபிப்பதற்கும், குறித்த பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
எச்சரிக்கை - வடக்கில் எச்.ஐ.வி தொற்று மிக வேகமாக அதிகரிப்பு!
அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகர...
தேர்தலுக்கு ராஜபக்சர்கள் அஞ்சுபவர்கள் அல்ல - தயாராகவே இருங்கள் – எதிரணியினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் ...
|
|