தொடர்ந்தும் முடக்க நிலையை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடித்தால் உள்ளூர் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் சம்பந்தமான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் மேல் மாகாணத்தில் இயங்கும் வணிகங்களை சார்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவைத் தொடர்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி கொரோனா வைரஸ் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாகவும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் விதமாக பல்வேறு நிவாரண செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts: